அக்குபங்சர் ஒர் விளக்கம்./Introduction to Acupuncture

அக்குபங்சர் ஒர் விளக்கம்.

அலோபதி, ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதம் போன்றவை போலவே அக்குபங்ச்சரும் ஒரு தனிப்பட்ட வைத்திய முறைதான். ஆனால் அது முற்றிலும் வித்தியசமானது.
மருந்து, மாத்திரம், சூரணம், லேகியம் போன்றவற்றை எதுவும் கொடுக்காமல் ஊசியும் போடாமல், மனித உடலை மூடிக் கொண்டிருக்கும் தோலில் அக்குபங்சர் ஊசியைச் செருகுவதன் மூலம் எல்லா வகையான நோய்களையும் குணப்படுத்தலாம் என்று சொன்னால் சாதாரண மனிதர்களால் அதை நம்பவே முடியாது.
ஆனால் அதுதான் உண்மை! அதிசயத்தக்க உண்மை! இன்று ஆயிரக் கணக்கான நோயாளிகள் அக்குபங்சர் மூலம் குணமடைகிறார்கள்.
அக்குபங்சர் சிகிச்சை முறை தோன்றிய இடம் சீன நாடு ஆகும். ஆனால் இன்று அது உலகம் முழுவதும் பரவிக் கிடக்கிறது. சீன டாக்டர்களைப் போலவே மேல்நாட்டு டாக்டர்களும் சிறப்பாக அக்குபங்சர் சிகிச்சை அளிக்கின்றார்கள்.
சாதாரணமாக, நோய்களைக் குணப்படுத்துவதற்காக வைத்தியம் பார்ப்பவர்கள் மருந்து மாத்திரைகள் கொடுப்பார்கள். அல்லது ஊசி வழியாக மருந்தை உடலுக்குள் செலுத்துவார்கள்.
ஆனால் அக்குபங்ச்சர் முறை அப்படிப்பட்டதல்ல. உடலில் ஒரு குறிப்பிட்ட புள்ளிகளில் ஊசிகளைச் செருகுகிறார்கள். சில நிமிடங்களுக்குப் பிறகு அந்த ஊசிகளை எடுத்து விடுகிறார்கள்.
இவ்வாறு சில நாட்கள் செய்ததும் நோய்கள் குணமாகி விடுகிறது! கேட்பதற்கே ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? மருந்து கொடுப்பதில்லை, மாத்திரைகொடுப்படில்லை, ஊசி மூலம் உடலுக்குள் மருந்தையும் செலுத்துவதில்லை. உடலில் சில குறிப்பிட்ட புள்ளிகளில் ஊசிகளைச் செருகி வைப்பதன் மூலம் நோய்களைக் குணப்படுத்துகிறார்கள் என்றால் அது நம்பும்படியாகவா இருக்கிறது?
ஆனால் அதை நம்பித்தான் ஆகவேண்டும். ஏனென்றால் அது உண்மை. உலகின் பல பாகங்களிலும் இன்று இலட்சக் கணக்கான மக்கள் அக்குபங்சர் சிகிச்சை மூலம் நோய் நீங்கிக் குணமடைகிறார்கள்.
அக்குபங்சர் சிகிச்சை மூலம் சில குறிப்பிட்ட நோய்களைத்தான் குணப்படுத்த முடியும் என்பதில்லை. எல்லா வகையான நோய்களையும் குணப்படுத்த முடியும். அதற்கான அத்தனை சாத்திய கூறுகளும் அக்குபங்சர் வைத்தியத்தில் உள்ளது.

1. அக்குபங்சர் என்றால் என்ன?
அக்குபங்சர் என்பது  மருந்து மாத்திரை ஏதுமில்லாமல் நாடிப் பரிசோதனையின் மூலம் நோய்களை கண்டறிந்து மிக மெல்லிய ஊசிகளை கொண்டு உடலிலும் மனதிலும் ஏற்படும் நோய்களை நீக்கக்கூடிய சீனமருத்துவ முறையாகும்.
2. அக்குபங்சர் எதன் அடிப்படையில் வேலை செய்கிறது?
அக்குபங்சர் சக்தியை அடிப்படையாக கொண்ட  ஒரு முழுமையான  பக்கவிளைவுகள் இல்லாத மருத்துவமாகும். நம் உடம்பில் நரம்புகள், இரத்த குழாய்கள் இருப்பது போலவே சருமத்தில் சக்தி ஒட்ட பாதைகள் (Meridians) நமது கண்ணுக்குப் புலப்படாத வகையில் அமைந்துள்ளன. இவை பொதுவாக நமது உடம்பில் 26 பாதைகள் வழியாக இருதயம், கல்லிரல், மண்ணீரல் போன்ற உள் உறுப்புகளுடன் தொடர்பு கொண்டு தலைமுதல்பாதம்வரை சுற்றிவருகிறது.
 இந்தப் பாதையில் உள்ள ஏதாவது ஒரு புள்ளியில் சக்தி தேக்கமடைந்தாலும், குறைபாடு ஏற்பட்டாலும் நமது உடம்பில் பாதிப்புகள் ஏற்பட்டு நோய்கள் உண்டாகிறது. அப்போது அக்குபங்சர் நாடிப் பரிசோதனையின்மூலம் பாதிப்படைந்துள்ளப் புள்ளியை கண்டறிந்து மிக மெல்லிய அக்குபங்சர் ஊசிகள் மூலம் அல்லது விரலைக்கொண்டு தொடுதல் போன்ற முறைகளில் தூண்டும்போது பாதிக்கபட்டுள்ள சக்திப்புள்ளி இப்பிரபஞ்ச சக்தியுடன் (Cosmic Energy) தொடர்புக்கொண்டு மறுபடியும் உயிர்ப்புடன் இயக்கம் பெற்று நோய்கள் குணடைகின்றன.
இந்த ஊசிகள் மூலம் மருந்துகள் எதுவும் செலுத்தப்படுவதில்லை. நோய் என்ன என்பதை கண்டறியச் செய்யப்படும் மலம், சிறுநீர், இரத்தப்பரிசோதனை, எக்ஸ்ரே, ஸ்கேன் போன்ற பரிசோதனைகளுக்கும் அக்குபங்சர் மருத்துவமுறையில் அவசியமில்லை. 
3. பரிசோதனைகள் கருவிகள் இல்லாமல் அக்குபங்சரில் நோய்கள் எவ்வாறு      கண்டுபிடிக்கப்படுகிறது?
ஒரு அக்குபங்சர் மருத்துவரின் சிறப்பம்சமே பரிசோதனைகள் கருவிகள் இல்லாமல் நோய்களை கண்டுபிடிப்பதுதான். நமது உடலில் வயிறு, பெருங்குடல், சிறுகுடல், இருதயம், பெரிகார்டியம், கல்லீரல், மண்ணீரல், நுரையீரல், சிறுநீரகம், சிறுநீர்ப்பை, பித்தப்பை, தேக வெப்பக் கட்டுபாடு போன்ற முக்கியமான 12 உள்ளுருப்புகள் உள்ளன. இந்த உறுப்புகள் எந்தத் தன்மையில் இயங்குகிறது, எது பாதிப்படைந்துள்ளது, நோய்களுக்கு காரணமான உறுப்பு எது, அதன் சக்தி நிலை என்ன என்பதை நாடிப் பரிசோதனையின் (Pulse Diagnosis) மூலம் கண்டுபிடித்துவிட முடியும். அதுவும் ஒரிரு நிமிடங்களில் கண்டுபிடித்துவிடலாம்.

 மேற்கில் குத்தூசி மருத்துவ நிபுணர்கள் சார்ந்த சுட்டிக்காடுதல்கள்
மருத்துவ குத்தூசி மருத்துவத்துக்கான (2004) அமெரிக்கச் சங்கம் பின்வருமாறு குறிப்பிட்டது: "அமெரிக்காவில் குத்தூசி மருத்துவம் அதன் மிகப்பெறும் வெற்றியை அடைந்திருக்கிறது. மேலும் தசைக்கூட்டு வலிக்கான சிகிச்சைகளில் இது பெருமளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது, குத்தூசி மருத்துவமானது கீழே பட்டியலிடப்பட்டிருக்கும் நிலைக்கான மிகைநிரப்புச் சிகிச்சையாகக் கருதப்படலாம் என அவர்கள் தெரிவித்தனர். குறிப்பு: "இந்தச் சுட்டிக்காட்டுதல்களில் பெரும்பாலானவை உரைநூல்கள் அல்லது குறைந்தபட்சம் 1 பத்திரிகைக் கட்டுரை ஆதரவு பெற்றது ஆகும்.

1.    அடிவயிற்று விரிவு/வயிற்றுப்புசம்
2.   தீவிர மற்றும் நீண்டகால வலிக் கட்டுப்பாடு
3.   ஒவ்வாமை புரையழற்சி
4.   அதிக இடர்பாட்டுடன் கூடிய நோயாளிகளுக்கான உணர்வகற்றல் அல்லது இதற்கு முன்னர் மயக்க மருந்துக்கு எதிர்விளைவுகள் ஏற்படுத்திய நோயாளிகளுக்கு
5.   பசியின்மை
6.   மனக்கலக்கம், அச்சம், பீதி
7.   கீல்வாதம்/மூட்டு நோய்
8.   இயல்பற்ற நெஞ்சு வலி(எதிர்மறை நோய் முதல் நாடல்)
9.   இழைமப்பையழற்சி, தசை நாண் அழற்சி, மணிக்கட்டு புழைவழி நோய்க்குறி
10. சில செயல்பாட்டு இரையக குடலியச் சீர்குலைவுகள் (குமட்டுதல் மற்றும் வாந்தியெடுத்தல், களத்துக்குரிய தசை வலித்துடிப்பு, அமில மிகைப்பு, எரிச்சலடையும் குடல்) *
11. மையநரம்பு மண்டல மற்றும் அடிமுதுகுத்தண்டு நோய்க்குறிகள்
12. மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு
1.   போதை மருந்துக்கான அறிகுறிகளுடன் இருமல்
2.   மருந்து நச்சுநீக்கம் பரிந்துரைக்கப்படுகிறது
3.   சூதகவலி, கூபக வலி
4.   தாளிறுக்கம்
5.   தலைவலி (ஒற்றைத்தலைவலி மற்றும் நெருக்கடி நிலை வகை), தலைச்சுற்றல் (மெனியர் நோய்), காதிரைச்சல்
6.   நோய் மூலம் அறியா படபடப்புகள், சைனஸ் மிகை இதயத் துடிப்பு
7.   எலும்பு முறிவுகளில் வலி கட்டுப்பாடு, திரவக் கோர்வை மற்றும் மேம்பட்ட குணமாதல் செயல்பாடுகளில் உதவுதல்
8.   தசை வலித்துடிப்புகள், தசை நார் வலிப்புகள், தசை நடுக்கங்கள், நிலைச்சுருக்கங்கள்
9.   நரம்பு வலிகள் (முப்பெருநரம்பு, அக்கி சூழல் அமைப்பு, ஈரல் பின் புற வலி, மற்றவை)
10. அசாதாரணத் தோல் அழற்சி
11. தொடர் விக்கல்கள்
12. உண்மையற்ற வலி
1.    உள்ளங்கால் திசுப்படல அழற்சி
2.   பின்-காயத்துக்குரிய மற்றும் பின்-நடைமுறை குடல் அசைவிழப்பு
3.   செலக்டட் டெர்மடோசஸ் (தோல் அரிப்பு, நமைத்தல், படை நோய், தடிப்புத் தோல் அழற்சி)
4.   வாத நோய்க்குறியின் நோய்த்தாக்கப் பின் விளைவுகள் (பேச்சிழப்பு, ஒரு பக்க வாதம்)
5.   ஏழாம் நரம்பு வாதம்
6.   தீவிர அதிவெப்பத்துவம்
7.   சுளுக்குகள் மற்றும் நசுக்கல்கள்
8.   பொட்டு மூட்டு ஒழுங்குக் குலைவு, பல் கடித்தல்
9.   சிறுநீருக்குரிய கட்டுப்பாடிழப்பு, நினைவாற்றல் (நரம்பு ஆற்றல் முடுக்கம், வலிப்பு தொடர்புடையவை, தீங்கி விளைவிக்கும் மருந்து விளைவுகள்)
10.  எடை குறைவு

 உலக சுகாதார நிறுவனம் மூலமாக வெளியிடப்பட்ட அறிக்கையில் குத்தூசி மருத்துவம் நிபுணர்களின் கூற்றுக்கள்
2003 ஆம் ஆண்டில் ஒரு குத்தூசி மருத்துவம் நிபுணர் உலக சுகாதார நிறுவனத்தின் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவக் கொள்கைத் துறை மூலமாக ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அந்த நிபுணர் குத்தூசி மருத்துவம் சிகிச்சைக்கு திறன் வாய்ந்த பலனைக் கொடுப்பதாக நினைத்த நோய்கள், அறிகுறிகள் மற்றும் நிலைகளின் வரிசையைப் பட்டியலிட்டிருந்தார். அது பின்வருமாறு:[12]
2.   கதிரியக்கச் சிகிச்சை மற்றும்/அல்லது வேதிச்சிகிச்சைக்கான எதிரான விளைவுகள்
8.   பிள்ளைபேறில் தூண்டல் மற்றும் சினைக்கருவின் உறுப்பு நிலை மாற்றத்தின் திருத்தம்
9.   தோளைச் சுற்றிய திசுக்களின் அழற்சி
12. மல்வயிறு, முகம், கழுத்து, முழங்கை வலி, பின் முதுகு, முழங்கால், பல் மருத்துவம் பார்க்கும் சமயத்தில் மற்றும் அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு ஏற்படும் வலி
13. முதன்மை சூதகவலி

Introduction to Acupuncture

In 1997, National Institutes of Health published Consensus Statement, summarizing the state of knowledge drawn from clinical trial concerning acupuncture efficacy. The Authors concluded that there were “promising results showing efficacy of acupuncture in adult postoperative and chemotherapy nausea and vomiting and in postoperative dental pain” In other conditions, mostly various kinds of pain, acupuncture “might be useful as an adjunct treatment or an acceptable alternative”

One year before publication of statement mentioned above, the meeting of scientists, called WHO Consultation on Acupuncture, was organized in beautiful Italian town of Cervia. That meeting resulted in creation of official report on the effectiveness of acupuncture based on data from controlled clinical trials. The report was finally published in 2003. The results of 255 trials published before the end of 1998 or beginning of 1999 were included.  

Indications
Diseases, symptoms or conditions for which acupuncture has been proved – through controlled trials—to be an effective treatment:
1.    Adverse reactions to radiotherapy and/or chemotherapy
2.    Allergic rhinitis (including hay fever)- ஒவ்வாமை நாசியழற்சி
3.    Biliary colic- பித்தநீர்க் குழாய் வலி
4.    Depression (including depressive neurosis and depression following stroke)- மன அழுத்தம்
5.    Dysentery, acute bacillary- வயிற்றுக் கடுப்பு, தீவிர பாக்டீரிய
6.    Dysmenorrhoea, primary- வலிமிகுவிடாய், முதன்மை
7.    Epigastralgia, acute (in peptic ulcer, acute and chronic gastritis, and gastrospasm)- வயிற்று புண்
8.    Facial pain (including craniomandibular disorders)- முக வலி
9.    Headache- தலைவலி
10.  Hypertension, essential- உயர் இரத்த அழுத்தம்
11.  Hypotension, primary- தாழழுத்தத்திற்கு
12.  Induction of labour-
13.  Knee pain- முழங்கால் வலி
14.  Leucopenia- இரத்த வெள்ளை அணுக் குறைவு
15.  Low back pain- இடுப்பு வலி
16.  Malposition of fetus, correction of- கரு உறுப்பு நிலை மாற்றம்
17.  Morning sickness- காலை சுகவீனம்
18.  Nausea and vomiting- குமட்டல் மற்றும் வாந்தி
19.  Neck pain- கழுத்து வலி
20.  Pain in dentistry (including dental pain and temporomandibular dysfunction)- பல் வலி
21.  Periarthritis of shoulder- தோள்பட்டை Periarthritis
22.  Postoperative pain-
23.  Renal colic- சிறுநீரக வலி
24.  Rheumatoid arthritis- முடக்கு வாதம்
25.  Sciatica- கால் வலி
26.  Sprain- சுளுக்கு
27.  Stroke- ஸ்ட்ரோக்

28.  Tennis elbow- டென்னிஸ் எல்போ

Comments

Popular posts from this blog

உளவள ஆலோசனை என்றால் என்ன?

Introduction to counseling