அக்குபங்சர் ஒர் விளக்கம்./Introduction to Acupuncture
அக்குபங்சர் ஒர் விளக்கம். அலோபதி, ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதம் போன்றவை போலவே அக்குபங்ச்சரும் ஒரு தனிப்பட்ட வைத்திய முறைதான். ஆனால் அது முற்றிலும் வித்தியசமானது. மருந்து, மாத்திரம், சூரணம், லேகியம் போன்றவற்றை எதுவும் கொடுக்காமல் ஊசியும் போடாமல், மனித உடலை மூடிக் கொண்டிருக்கும் தோலில் அக்குபங்சர் ஊசியைச் செருகுவதன் மூலம் எல்லா வகையான நோய்களையும் குணப்படுத்தலாம் என்று சொன்னால் சாதாரண மனிதர்களால் அதை நம்பவே முடியாது. ஆனால் அதுதான் உண்மை! அதிசயத்தக்க உண்மை! இன்று ஆயிரக் கணக்கான நோயாளிகள் அக்குபங்சர் மூலம் குணமடைகிறார்கள். அக்குபங்சர் சிகிச்சை முறை தோன்றிய இடம் சீன நாடு ஆகும். ஆனால் இன்று அது உலகம் முழுவதும் பரவிக் கிடக்கிறது. சீன டாக்டர்களைப் போலவே மேல்நாட்டு டாக்டர்களும் சிறப்பாக அக்குபங்சர் சிகிச்சை அளிக்கின்றார்கள். சாதாரணமாக, நோய்களைக் குணப்படுத்துவதற்காக வைத்தியம் பார்ப்பவர்கள் மருந்து மாத்திரைகள் கொடுப்பார்கள். அல்லது ஊசி வழியாக மருந்தை உடலுக்குள் செலுத்துவார்கள். ஆனால் அக்குபங்ச்சர் முறை அப்படிப்பட்டதல்ல. உடலில் ஒரு குறிப்பிட்ட புள்ளிகளில் ஊசிகளைச் செருகுகிறார்கள். சி...